Skip to content

கோவையில் பெரியார் படிப்பகம் முன்பு காதலர் தினம் கொண்டாட்டம்….

காதலர் தினத்தை முன்னிட்டு கோவையில் பெரியார் படிப்பகம் முன்பு காதலர் தினம் கொண்டாடப்பட்டது, இதில் புதுமண காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் ஒருவருக்கொருவர் கேக் ஊட்டி, முத்தமிட்டு அன்பை வெளிப்படுத்தினர். இன்றைய நாள் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் கோவையில் காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் படிப்பகம் முன்பு, கலப்பு திருமணம் புரிந்தோர் நல சங்கம் சார்பில் தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுசெயலாளர் கு.இராமகிருட்டிணன் தலைமையில் காதலர் தினவிழா கொண்டாடப்பட்டது. இதில் காதல் திருமணம் புரிந்து கொண்டோர் கேக் வெட்டி ஒருவருக்கொருவர் பரிமாறி அன்பை வெளிப்படுத்தினர். மேலும் இந்த நிகழ்வில் காதல் திருமணம் குறித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

error: Content is protected !!