ஆண்டு தோறும் பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினம் (வாலன்டைன்ஸ் டே) கொண்டாடப்பட்டு வருகிறது.சமீப காலமாக உலகம் முழுவதும் காதலர் தினம் திருவிழா போல் கொண்டாடப்பட்டு வருகிறது. சில பிற்போக்குவாதிகள், காதலர் தின கொண்டாட்டம் அந்நிய கலாச்சாரம். எனவே அதை கொண்டாடக்கூடாது எனக்கூடி பிப்ரவரி 14ம் தேதி காதலர்களை கண்டால் அவர்களை தாக்குவது, விரட்டுவது போன்ற செயல்களிலு் ஈடுபடுவதுடன், அன்றைய தினம் கழுதைகளுக்கு திருமணம் செய்யும் சடங்குகளை செய்வார்கள்.
இந்த’நிலையில் தமிழ்நாடு மாணவர் இளையோர் கூட்டமைப்பு சார்பில் தமிழக டிஜிபி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில் , காதலர் தினத்தை முன்னிட்டு சமூக விரோதிகள் சிலர் காதலர்களை, தாக்குவது, காதலுக்கு எதிராக சமூகவிரோத செயலில் ஈடுபடுவது உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபடவுள்ளனர். காதலர்களுக்கு இடையூறு செய்பவர்களை கைது செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது