சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் கொட்டவாடி, சின்னமநாயக்கன்பாளையம், ரெங்கனூர், தமையனூர் உள்ளிட்ட கிராமங்களில் காணும் பொங்கலன்று வங்காநரி வழிபாடு நடந்து வருகிறது. இந்த கிராம மக்கள் வங்காநரியை பிடித்து வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்த கிராமங்களில் வங்காநரியை பிடித்து வழிபாடு நடத்திய பிறகு மீண்டும் வனப்பகுதியில் விட்டனர். தகவல் அறிந்த வனச்சரகர் துரைமுருகன் தலைமையிலான வனத்துறையினர் விசாரணை நடத்தினர். வங்காநரியை பிடித்து வழிபாடு நடத்திய 4 கிராமங்களுக்கும் வனவிலங்குகளை வேட்டையாட முயன்றதாக ரூ.3 லட்சத்து 90 ஆயிரம் அபராதம் விதித்து அதனை வசூலித்து நடவடிக்கைஎடுத்தனர்.