உலகம் முழுவதும் ஆண்டுதோறும் நேற்று( பிப்ரவரி 14) காதலர் தினம் கொண்டாடப்பட்டது. காதலர் தினத்தில் காதலர்கள், தம்பதிகள் தங்கள் இணையருக்கு ரோஜாக்கள், சாக்லேட்டுகள் உள்ளிட்ட அன்பளிப்புகளை வழங்குவது வழக்கம். இதனால் அன்பளிப்பு பொருட்களின் விற்பனை பிப்ரவரி மாதத்தில் அமோமாக நடந்தது. இந்தியாவில் ஒருபடி மேலே சென்று காதலர் தினத்துக்கு ஒருவாரம் முன்பாகவே, ரோஜா தினம் (பிப்.7), சாக்லேட் தினம் (பிப்.9), டெடி தினம் (பிப்.10), பிராமிஸ் தினம் (பிப்.11), ஹக் (Hug) தினம் (பிப்.12), முத்த தினம் (பிப்.13) என அந்த வாரம் முழுக்க ஒரே கிளுகிளுப்பான கொண்டாட்டம் தான்.
The peak is here and currently running at 406 CPM!
More than 20k chocolates and chocolate boxes are on the way and will be delivered in the next 10 minutes
— Albinder Dhindsaஅதே போல, அன்பளிப்பு பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்யும் FNP நிறுவனம் காதலர் தினத்தை முன்னிட்டு மணிக்கு 350 ரோஜா மலர்களை டெலிவரி செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. ஸ்விக்கி நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ரோஹித் கபூர் தனது எக்ஸ் பக்கத்தில், “காதலர் தினத்துக்கான கேக் விற்பனை முதல்நாள் மாலை முதலே அதிகரிக்க தொடங்கிவிட்டது. இரவு 10 மணிக்கு அதிகபட்ச விற்பனை ஆகியுள்ளது. ஒரு நிமிடத்துக்கான சராசரி கேக் விற்பனை இன்று மேலும் அதிகரிக்கலாம்” என்று பதிவிட்டுள்ளார்.