மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை கூறைநாடு ரேவதி நகரில் வலம்புரி விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டு திருப்பணிகள் தொடங்கி நடைபெற்று அண்மையில் நிறைவுற்றது. இதையடுத்து நேற்று முன்தினம்முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. தொடர்ந்து கும்பாபிஷேக தினமான நேற்று காலை இரண்டாம் கால யாக சாலை பூஜை தொடங்கி பூர்ணாஹூதி மற்றும் மகா தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்களை சிவாசாரியார்கள் தலையில் சுமந்து விமான கும்பத்தை அடைந்து கோபுர கலசத்தில் புனித நீர் வார்த்து மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மூலவருக்கு மகா அபிஷேகம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.