இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்கள் தானமாக வழங்கிய நிலங்கள் மூலம் வரும் வருவாயானது மசூதி, இஸ்லாமியர்களின் கல்வி மேம்பாடு உள்ளிட்ட காரணங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த வக்பு சொத்துக்களை நிர்வகிப்பதற்காக கடந்த 1995ம் ஆண்டு வக்பு வாரிய சட்டம் உருவாக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போதுள்ள வக்பு வாரிய சட்டத்தில் ஒன்றிய அரசு பல்வேறு திருத்தங்களை கொண்டு வந்துள்ளது.
இந்த சட்ட திருத்த மசோதாவில் வக்பு வாரியங்களின் செயல்பாடுகளில் வெளிப்படை தன்மை, வாரியத்தில் இஸ்லாமிய பெண்கள் மற்றும் இஸ்லாமியர் அல்லாதவர்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வது, வாரியத்தின் அதிகாரத்தை ஒழுங்குப்படுத்துவது உட்பட பல்வேறு முக்கிய மாற்றங்கள் நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இதற்கு பல்வேறு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றார் இந்நிலையில் கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி பகுதியில் அதிகம் இஸ்லாமிய மக்கள் வாழும் பகுதியில் வக்பு வாரிய திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் க்யூ ஆர் கோட் ஸ்கேன் மூலம் அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பதிவு செய்து வருகின்றனர்