அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி 2024, மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு வாக்குப்பதிவு மையங்களில் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களை கணினி மூலம் இரண்டாம் கட்ட தற்செயல் தெறிவு (Second Randomization) முறையில் ஒதுக்கீடும் செய்யும் பணி மாவட்ட தேர்தல் அலுவலர் / சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில், சிதம்பரம் (தனி) பாராளுமன்ற தொகுதி தேர்தல் பொதுப்பார்வையாளர் போர் சிங் யாதவ் முன்னிலையில் நடைபெற்றது.
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடைபெறவுள்ளதை தொடர்ந்து அரியலூர் மாவட்டத்திலுள்ள 149.அரியலூர் சட்டமன்ற தொகுதியில் 306 வாக்குச்சாவடி மையங்களும், 150.ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் 290 வாக்குச்சாவடி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், மேற்காணும் வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்ற உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர், நிலை அலுவலர் -1, நிலை அலுவலர் -2, நிலை அலுவலர் -3, நிலை அலுவலர் -4 ஆகியோர்களை கணினி மூலம் இரண்டாம் கட்ட தற்செயல் தெறிவு (Second Randomization) முறையில் ஒதுக்கீடும் செய்யும் பணி இன்றையதினம் நடைபெற்றது.
அதன்படி, 20 சதவீத இருப்புடன் 149.அரியலூர் மற்றும் 150.ஜெயங்கொண்டம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட 596 வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரிய 715 வாக்குச்சாவடி அலுவலர்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் -1,2,3 ஆகிய நிலையில் தலா 715 மற்றும் நிலை அலுவலர் -4 நிலையில் 49 என்ற எண்ணிக்கையில் கணினி மூலம் இரண்டாம் கட்ட தற்செயல் தெறிவு (Second Randomization) முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி அரியலூர் மாவட்டத்தில் உள்ள 149.அரியலூர் மற்றும் 150.ஜெயங்கொண்டம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட 596 வாக்குச்சாவடிகளில் பணிபுரிய மொத்தம் 20 சதவீத இருப்புடன், 2909 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளனர் என மாவட்ட தேர்தல் அலுவலர் / சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்தார். இவர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புகள் 07.04.2024 அன்று அரியலூர் மான்ட்போர்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஜெயங்கொண்டம் பாத்திமா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும் இரண்டு வேளைகளாக (காலை 9 மணி முதல் 1 மணிவரை மற்றும் பகல் 1.30 மணி முதல் மாலை 5.30 மணிவரை) நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கங்காதாரிணி, வருவாய் கோட்டாட்சியர்கள் ராமகிருஷ்ணன் (அரியலூர்), ஷீஜா (உடையார்பாளையம்), மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சுமதி, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் உமா மகேஸ்வரன், மாவட்ட தகவலியல் மைய அலுவலர் ஜான் பிரிட்டோ, வட்டாட்சியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.