சிதம்பரம் நாடாளுமன்ற (தனி) தொகுதியில் நடைபெற்ற தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகில் உள்ள மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு என்னும் மையத்தில் உள்ள வைப்பு அறையில் துப்பாக்கி ஏந்திய
போலீஸ் பாதுகாக்கப்படுகிறது . அரியலூர் மாவட்ட ஆட்சியர் / சிதம்பரம் பாராளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர் ஜா. ஆனி மேரி ஸ்வர்ணா இக்கல்லூரி நேரில் சென்று வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வைப்பு அறையையும், மூன்றடுக்கு பாதுகாப்பையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.