இந்தியத் தேர்தல் ஆணையத்தினால் பாராளுமன்ற தேர்தல் 2024 – அரியலூர் மாவட்டம். 27 சிதம்பரம் (தனி) பாராளுமன்றத் தொகுதிக்கு பொதுத் தேர்தல் பார்வையாளராக போர் சிங் யாதவ், சட்டம் மற்றும் ஒழுங்கு பார்வையாளராக ஜன்மேஜெயா P கைலாஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார் ஏதுமிருப்பின், அரியலூர் அரசினர் சுற்றுலா மாளிகையில் அறை எண்.101-ல் பொதுப்பார்வையாளரிடம் நேரடியாகவோ அல்லது 62018 95384 என்ற செல்லிடைப்பேசி எண்ணில் வாட்ஸ்ஆப் மூலமாகவும் தகவல்கள் தெரிவிக்கலாம்.
அரியலூர் அரசினர் சுற்றுலா மாளிகையில் அறை எண்.201-ல் சட்டம் மற்றும் ஒழுங்கு பார்வையாளரிடம் நேரடியாகவோ அல்லது 94120 50384 என்ற செல்லிடைப்பேசி எண்ணில் வாட்ஸ்ஆப் மூலமாகவும் தகவல்கள் தெரிவிக்கலாம்.
அரியலூர் அரசினர் சுற்றுலா மாளிகையில் அறை எண்.103-ல் தேர்தல் செலவின பார்வையாளர் நிதின் சந்த் நெகி அவர்களிடம் நேரடியாகவோ அல்லது 93639 69582 என்ற செல்லிடைப்பேசி எண்ணில் வாட்ஸ்ஆப் மூலமாகவும் தகவல்கள் தெரிவிக்கலாம்.
மேலும், சிதம்பரம் பாராளுமன்றத் தொகுதியின், தேர்தல் பொது பார்வையாளர் போர் சிங் யாதவ் இன்று, சிதம்பரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வுதளம் போதிய அடிப்படை வசதிகள் இருப்பதையும் உறுதி செய்ய அலுவலர்களை அறிவுறுத்தினார். தொடர்ந்து, உடையார்பாளையம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திர அறையினை பார்வையிட்டு அறையின் பாதுகாப்பு தன்மை குறித்தும், பதிவேடுகளை ஆய்வு செய்தார். மேலும், கோட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த
24.03.2024 அன்று நடைபெற்ற வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பில் விடுபட்ட வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றுவருவதை பார்வையிட்டு அவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகள் குறித்தும் கேட்டறிந்தார்.
பின்னர், தத்தனூர் மீனாட்சி இராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையத்தினை பார்வையிட்டும், 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பெட்டிகள் வைக்கப்படவுள்ள வைப்பறையினை பார்வையிட்டு ஆய்வு செய்து பாதுகாப்பு அம்சங்கள் குறித்து வரைபடங்களை பார்வையிட்டு அலுவலர்களிடம் தேர்தல் பொதுப்பார்வையாளர் போர் சிங் யாதவ் கேட்டறிந்தார்.
ஆய்வின் போது சிதம்பரம் சார் ஆட்சியர் ராஷ்மிராணி, அரியலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கங்காதாரிணி, வருவாய் கோட்டாட்சியர் உடையார்பாளையம் ஷீஜா, அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தார்.