இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி ஒருங்கிணைந்த இறுதி வாக்காளர் பட்டியல் 22.01.2024 அன்று வெளியிடப்படுவது தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியலுக்கான மேற்பார்வையாளர் மற்றும் நிலசீர்த்திருத்த ஆணையர் முனைவர்.என்.வெங்கடாசலம் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா முன்னிலையில் நடைபெற்றது.
மேற்கண்ட ஆய்வுக்கூட்டத்தில் சிறப்பு சுருக்கத்திருத்தம் 2024 பணிகள் தொடர்பாகவும், 22.01.2024 அன்று ஒருங்கிணைந்த இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுவதற்கான முன்னேற்பாடுகள், நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும், 25.01.2024 அன்று; தேசிய வாக்காளர் தினவிழா நடத்துவது தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்தும் ஆலோசனைகள் வழங்கினார்.
அதன்பிறகு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திர செயல் விளக்க மையத்தினை பார்வையிட்டார்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) பூங்கோதை, வருவாய் கோட்டாட்சியர்கள் ராமகிருஷ்ணன் (அரியலூர்), பரிமளம்(உடையார்பாளையம்) மற்றும் வட்டாட்சியர்கள் ஆனந்தவேல் (அரியலூர்), வேல்முருகன் (தேர்தல்) ஆகியோர்கள் கலந்துகொண்டனர்..