அரியலூர் மாவட்டத்தில் உள்ள 149- அரியலூர் சட்டமன்ற தொகுதி மற்றும் 150-ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளில் எதிர்வரும் 01.01.2025 ஆம் நாளை தகுதி நாளாகக் கொண்டு 2025 ஆம் ஆண்டிற்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் வெளியிடும் பொருட்டு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், பிழைத்திருத்தம் செய்தல் ஆகியவற்றிற்கு விண்ணப்பிக்க அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் 09.11.2024 (சனிக்கிழமை), 10.11.2024 (ஞாயிற்றுக்கிழமை), மற்றும் 23.11.2024 (சனிக்கிழமை), 24.11.2024 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தினங்களில் நடைபெற உள்ளது.
இம்முகாம் நடைபெறும் நாட்களை பொதுமக்கள் பயன்படுத்திகொண்டு 01.01.2025 ஆம் நாளில் 18 வயது பூர்த்தியடைந்த நபர்களின் பெயரினை வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும் (படிவம்-6), ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்களின் பெயர், முகவரி, வயது மற்றும் இதர வகைகளில் உள்ள பிழைகளை திருத்தம் செய்யவும் (படிவம்-8) படிவங்களை அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் பெற்று அப்படிவங்களை பூர்த்தி செய்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் வழங்கலாம். ஆகவே பொதுமக்கள் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தெரிவித்துள்ளார்.