Skip to content
Home » உலக பிளிட்ஸ்  செஸ்  சாம்பியன்ஷிப்: வைஷாலி வெண்கலம் வென்றார்

உலக பிளிட்ஸ்  செஸ்  சாம்பியன்ஷிப்: வைஷாலி வெண்கலம் வென்றார்

  • by Authour

அமெரிக்காவின் நியூயார்க் நகரில், உலக பிளிட்ஸ்  செஸ்  சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. அதிவிரைவாக காய்களை நகர்த்த வேண்டிய இந்த போட்டிகளில் இந்திய கிராண்ட் மாஸ்டரும் தமிழ்நாட்டை சேர்ந்தவருமான வைஷாலி  ஜார்ஜியாவின் நானா ட்ஸாக்னிட்ஸே, ரஷ்யாவின் வாலன்டினா கினினா ஆகியோரை வென்றார். இதையடுத்து 11 சுற்றுகள் முடிவில் 8 வெற்றிகள், 3 டிராக்களுடன் 9.5 புள்ளிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடம் பெற்றார்.

 புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்ததை அடுத்து வைஷாலி நாக்அவுட் போட்டியாக காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். அதில் வெற்றி பெற்றதை தொடர்ந்து  அரை இறுதியில் சீன வீராங்கனை ஜு வென்ஜுனிடம்  மோதினார். இதில் கைஷாலி தோற்றதை அடுத்து  அவருக்கு  வெண்கலம் கிடைத்தது. சீன வீராங்கனை ஜு வென்ஜுனிடம் 0.5-2.5 என்ற புள்ளி கணக்கில் வைஷாலி தோல்வியடைந்தார்.
  இந்த  போட்டியில் சாமியன் பட்டத்தை  கார்ல்சென், இயன் ஆகியோர் பகிர்ந்து கொண்டனர்.