அண்ணா அறிவாலயத்தில் இன்று முதல்வர் மு.க ஸ்டாலினை சந்தித்த பிறகு கவிஞர் வைரமுத்து நிருபர்களிடம் கூறியதாவது..
அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது என்பதற்கு அமலாக்கத்துறைக்கு உரிமை இருப்பதாகவும் அவர்களுக்கு அந்த அதிகாரம் இருப்பதாகவும் சொல்லி இருக்கிறார்கள். இருக்கட்டும், உங்கள் அதிகாரப்படி கைது செய்து இருக்கிறீர்கள். உங்கள் உரிமைப்படி கைது செய்திருக்கிறீர்கள் என்பதெல்லாம் சரி. கைது செய்த முறை சரியா? அவர் அமைச்சர் அல்லவா? தமிழ்நாட்டு மக்களின் பிரதிநிதி அல்லவா?. செந்தில் பாலாஜி என்பவர் ஒரு தனி மனிதரா? இல்லை… தமிழ்நாட்டு அமைச்சரவையில் ஒரு கேபினட் அமைச்சராக இருக்கிற ஒருவர் தாக்கப்பட்டார், அவமதிக்கப்பட்டார். சம்பந்தப்பட்ட நாட்டு மக்களின் மனதையும் அவர்கள் தங்களின் பூட்ஸ் கால்களால் மிதிக்கிறார்கள் என்று பொருள். அதை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது. சட்டப்படி தமிழக அரசு சந்திக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. சட்டத்தை சட்டத்தின் மூலமாகவே எதிர்கொள்வார்கள். நீதி கிட்டும் என்று நம்புகிறேன்” இவ்வாறு அவர் கூறினார்.