108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் திருச்சி திருவரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா திருநெடுந்தாண் டகம் நிகழ்ச்சியுடன் நாளை (30ந்தேதி) தொடங்குகிறது. பகல்பத்து உற்சவத்தின் முதல் நாளான திருமொழி திருவிழா நாளை மறுநாள் (31ம் தேதி) தொடங்குகிறது. அன்றையதினம் காலை 7.45 மணிக்கு நம் பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு காலை 8.30 மணிக்கு அர்ஜுன மண்டபம் வந்தடைவார். காலை 8.30 மணி முதல் பகல் 12 மணி வரை அரை யர்கள் நம்பெருமாள் முன் நின்று நாலாயிரம் திவ்யப்பிர பந்த பாடல்களை அபிநயம் மற்றும் இசையுடன் பாடுவார்கள். இரவு 7 மணிக்கு அர்ஜுன மண் டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார்.
பகல் பத்தின் முதல் நாளில் இருந்து மூலவர் ரெங்கநாதர் முத் தங்கி சேவையில் காட்சியளிப்பார். இந்த முத்தங்கி சேவை தொடர்ந்து 20நாட்களுக்கு நடைபெறும் இதேபோல் பகல்பத்தின் ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளி பக் தர்களுக்கு சேவை சாதிப்பார். பகல்பத்து உற்சவத்தின் 10ம் நாளான வருகிற ஜனவரி 9 ந்தேதி நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளுவார்.
10ந்தேதி ராப்பத்து உற்சவத்தின் முதல் நாள் வைகுண்ட ஏகாதசி திருநாள் ஆகும். அன்றைய தினம் அதிகாலை 4.15 மணிக்கு நம்பெருமாள் மூலஸ் தானத்தில் இருந்து புறப்பட்டு அதிகாலை 5.15 மணிக்கு பரம பதவாசல் எனப்படும் சொர்க்க வாசலில் எழுந்தருளுவார். இதையொட்டி நம்பெருமாள் ரத்தின அங்கி அணிந்து பக்தர் களுக்கு அருள்பாலிப்பார்.
இந்த சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். அன்று இரவு 10 மணி வரை
சொர்க்கவாசல் திறந்திருக்கும். 11ந் தேதி முதல் 15 நதேதி வரை பகல் 1 மணி முதல் இரவு 8 மணி வரையிலும், 16ந் தேதி மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். ராப்பத்து 8ம் திருநாளான 17ந் தேதி சொர்க்கவாசல் திறப்பு இல்லை. 18ந் தேதி வழக்கம்போல் பகல் 1 மணி முதல் இரவு 8 மணி வரையும், 19ந் தேதி காலை 10.30 முதல் இரவு 8 மணி வரை பரமபத வாசல் திறந்திருக்கும்.