Skip to content
Home » தமிழை அழிக்க முடியாது…. மூக்கறுப்பட்ட கவர்னர்… மதிமுக வைகோ சாடல்…

தமிழை அழிக்க முடியாது…. மூக்கறுப்பட்ட கவர்னர்… மதிமுக வைகோ சாடல்…

  • by Authour

கரூர் மாவட்டம், குளித்தலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மதிமுக மாணவரணி மாநில செயலாளர் பால சசிகுமார் – திவ்யா திருமணத்தினை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தலைமை கழகச் செயலாளர் துரைவைகோ ஆகியோர் தலைமையேற்று முன் நின்று நடத்தி வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து மணமக்களை வாழ்த்தி மதிமுக பொதுச்செயலாளர்

வைகோ வாழ்த்து பேசிய பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்ததாவது : தரம் தாழ்ந்து பேசுவதில் தமிழக ஆளுநர் ஆர் என் ரவியை மிஞ்ச முடியாது என்றும், இன்று ஒரு பேச்சு பேசுபவர் நாளை அதை மறுத்து பேசுகிறார் என்றும் , தமிழ்நாட்டிற்கு வந்து தமிழை அழித்து விடலாம் என்று நினைத்து பேச ஆரம்பித்தவர் இந்தியால் தமிழை ஒன்றும் செய்ய முடியாது என்று தெரிந்து கொண்டு தற்போது மூக்கறுப்பட்டு போய் உள்ளார் எனவும், தமிழக முதல்வர் சொல்வதை கேட்கும் நிலைமைக்கு தமிழக ஆளுநர் வந்துள்ளதாகவும், ஆளுநர் அரண்மனைப் பிறவி, பிறவி போல் ஆளுநருக்கு வாய அடக்கம் தேவை. அதுபோல இருக்க வேண்டும். அதேபோல் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தினமும் ஏதோ ஒன்றை பேசுகிறார் யாரைப் பற்றி தான் பேசுகிறார் என்று தெரியவில்லை என்றும், அவராலும் தற்போது வரை எதையும் நிரூபிக்க முடியவில்லை என்றும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் திமுக அரசு, திராவிட மாடல் அரசு வெற்றிகரமாக நடந்து கொண்டிருப்பதாகவும், தமிழ்நாடு முதலமைச்சர் நாள்தோறும் திட்டமிட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் அதில் வெற்றியும் காண்கிறார். வரும் மதிமுக பொதுக்கூட்டத்தில் முக்கிய முடிவுகள் குறித்து அறிவிப்பதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *