ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவின் வாழ்க்கைப் பயணத்தை ஆவணப்படுத்தியிருக்கும் ‘மாமனிதன் வைகோ’ ஆவணப்படத்தின் திரையிடல் நிகழ்ச்சி சென்னை அசோக் நகரில் உள்ள மினி உதயம் தியேட்டரில் இன்று நடந்தது. இதில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி ,ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் வாழ்க்கைப் பயணம் குறித்து சிறப்புரையாற்றி வாழ்த்தினார்.
இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ம.தி.மு.க தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ, அண்ணா நகர் சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.கே.மோகன், தியாகராய நகர் ஜெ.கருணாநிதி, இயல், இசை நாடக மன்ற உறுப்பினர்-செயலாளர் விஜயா தாயன்பன், மகளிர் ஆணைய தலைவர் குமரி விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.