Skip to content
Home » தேவநூர மஹாதேவா-வுக்கு வைக்கம் விருது…. தமிழக அரசு அறிவிப்பு

தேவநூர மஹாதேவா-வுக்கு வைக்கம் விருது…. தமிழக அரசு அறிவிப்பு

 தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், சட்டப்பேரவையில், கடந்த 30.03.2023 அன்று எல்லை கடந்து சென்று சமூக நீதிக்காக வைக்கத்தில் போராடிய தந்தை பெரியாரை நினைவுகூரும் வகையில், பிற மாநிலங்களில் ஒடுக்கப்பட்டவர்கள் நலனுக்காகப் பாடுபட்டு, குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் ஆளுமைகள் அல்லது நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் “வைக்கம் விருது” சமூகநீதி நாளான செப்டம்பர் 17-ம் நாளன்று தமிழக அரசால் வழங்கப்படும் என்று 110-விதியின்கீழ் அறிவித்தார்.

வைக்கம் விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டதேவநூர மஹாதேவா-வுக்கு ஐந்து லட்சம் ரூபாய்க்கான காசோலை, பாராட்டுச் சான்றிதழ் மற்றும் தங்க முலாம் பூசிய பதக்கம் தமிழக முதல்வரால் கேரள மாநிலம் வைக்கத்தில் நாளை (டிச.12) நடைபெற உள்ள வைக்கம் நினைவகம் திறப்புவிழா நிகழ்ச்சியில் வழங்கப்படும், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *