தஞ்சாவூர் மேலவீதியில் அமைந்துள்ள விஜயராமர் கோவில் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தை சார்ந்த 88 கோவில்களில் ஒன்றாக திகழ்கிறது. இக்கோவிலில் ராமநவமி , வைகுண்ட ஏகாதசி , புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விஜய ராமரை தரிசனம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இந்த கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி பிரமோற்சவம் 9 நாட்கள் நடைபெறும். இவ்வாண்டு நேற்று முதல் தொடங்கி வரும் 24-ம்தேதி வரை வைகாசி பிரமோற்சவம் விழா நடைபெறுகிறது. வைகாசி பிரமோற்சவம் விழாவை முன்னிட்டு முதல் நாளில் கொடியேற்றம் நடைபெற்றது. உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். வைகாசி பிரமோற்சவம் நடைபெறும் நாட்களில் காலை 8 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடைபெறும்.
மாலை 6.30மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி புறப்பாடு நான்கு ராஜ வீதிகளிலும் நடைபெறும். இன்று அன்னப் பட்சி வாகனமும், நாளை சிம்ம வாகனம், 18-ம்தேதி அனுமந்த வாகனம், 19-ம்தேதி சேஷ வாகனம், 20-ம்தேதி கருட சேவையும். 21-ம்தேதி யானை வாகனமும், 22-ம்தேதி திருக்கல்யா ணமும் , 23-ம்தேதி குதிரை வாகனமும் ,24-ம்தேதி திருத்தேரும் நடைபெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே, உதவி ஆணையர் கவிதா, கோவில் செயல் அலுவலர் மாதவன் மற்றும் உபயதா ரர்கள் செய்து உள்ளனர்.