Skip to content

வாகன ஓட்டிகளுக்கு அபராதம் தொகை இருந்தால் உடனே செலுத்த வேண்டும் – திருச்சி கமிஷனர் எச்சரிக்கை.

  • by Authour

திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி திருச்சி மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்றது முதல் மாநகர காவல்துறை பணியை செம்மைப்படுத்தவும், திருச்சி மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவலர்கள் ரோந்து செய்து, பொதுமக்களுக்காக திறம்பட பணியாற்றிட திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கியுள்ளார்.

அதன்படி இன்று திருச்சி மாநகர காவல் ஆணையர் திருச்சி மாநகர நவீன காவல் கட்டுப்பாட்டறையை ஆய்வு செய்தார். ஆய்வின்போது CCTV கேமராக்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார்கள், திருச்சி மாநகர போக்குவரத்து காவல்துறையினரால் வழக்கு அதிகமாக பதியபடுவதாகவும் ஆனால் அபராத தொகை குறைந்த அளவே செலுத்தப்படுவதாகவும், இதனை மேம்படுத்தவேண்டும் என்றும், போக்குவரத்து காவலர்கள் வாரத்தில் ஒரு நாள் ஏதாவதொரு வாகனத்தை நிறுத்தி அந்த வாகனத்தின் மீது ஏதேனும் வழக்கு நிலுவையில் உள்ளதா என ஆராய்ந்து அபராதம் ஏதும் நிலுவையில் இருந்தால் அதனை செலுத்திய பிறகு வண்டியை உரியவரிடம் ஒப்படைக்கவேண்டும் என்றும், போக்குவரத்து சிக்னல்களை சுத்தமாகவும், சரியான முறையிலும் பாராமரிக்க வேண்டும் என்றும், பழுதான பேரிகார்டுகளை மாற்றி புதிய பேரிகார்டுகளை பயன்படுத்தவும், பேரிகார்டில் எந்தவொரு விளம்பர நோட்டிஸ் ஒட்டுவதை போக்குவரத்து காவலர்கள் தடுக்க வேண்டும் என்றும், திருச்சி மாநகர காவல் சார்பில் போக்குவரத்து காவலர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தவேண்டும் என்றும், போக்குவரத்து விழிப்புணர்வு முழக்கங்கள் உடைய விளம்பர

பலகைகளை மீட்பு வாகனத்தில் நிறுவி திருச்சி மாநகர் முழுவதும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி போக்குவரத்து காவலர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

இந்த ஆய்வின்போது திருச்சி மாநகர துணை காவல் ஆணையர் (தெற்கு), போக்குவரத்து காவல் உதவி ஆணையர், கண்டோண்மென்ட் காவல் உதவி ஆணையர், காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் உடன் இருந்தனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *