தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருக்கும் வடிவேலு நடித்து சமீபத்தில் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் வெளிவந்தது. அடுத்ததாக உதயநிதியின் மாமன்னன் படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.
இந்த நிலையில் பி.வாசு இயக்கத்தில் லாரன்ஸ் நடிக்கும் சந்திரமுகி 2-ம் பாகம் படத்திலும் நகைச்சுவை வேடத்தில் நடிக்க வடிவேலுவை ஒப்பந்தம் செய்தனர். இந்த படத்தின் படப்பிடிப்பில் வடிவேலுக்கும் டைரக்டர் பி.வாசுவுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதாக வலைத்தளங்களில் பரபரப்பு தகவல் பரவி வருகிறது. நடிக்க விருப்பம் இல்லாவிட்டால் சென்று விடலாம் என்று வடிவேலுவிடம் பி.வாசு கோபத்தோடு பேசியதாகவும் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனாலும் இந்த தகவலை இருவர் தரப்பிலும் உறுதிப்படுத்தவில்லை.இதுபற்றிய உண்மை தகவல் விரைவில் வெளிவரும் என திரையுலகம் கூறுகிறது. படத்தில் இருந்து வடிவேலுவை நீக்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.