வடிவேலு மற்றும் பகத் பாசில் நடிக்கும் மாரீசன் திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் மாமன்னன் எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் உடன் இணைந்து வடிவேலு, பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இருவரின் நடிப்பும் பெரிய அளவில் பேசப்பட்டது. அதைத்தொடர்ந்து வடிவேலு மற்றும் பகத் பாசில் ஆகிய இருவரும் இணைந்து மாரீசன் எனும் திரைப்படத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தை ஆர். கிருஷ்ணமூர்த்தி இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் 8நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த சில மாதங்களுக்கு முன்னரே தொடங்கப்பட்டு சென்னை போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பை இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி நாகர்கோவில் பகுதியில் இறுதி கட்ட படப்பிடிப்பு நடைபெற்ற வருவதாக தெரியவந்துள்ளது. மேலும் பகத் பாசில் கொஞ்சம் பிசியாக இருந்ததால் தற்போது தான் அவருடைய கால்ஷீட் கிடைத்துள்ளதாகவும் தற்போது அவருடைய காட்சிகளை வேகமாக படமாக்கி வருவதாகவும் சொல்லப்படுகிறது. எனவே இன்னும் சில நாட்களில் மாரீசன் படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.