Skip to content

வாச்சாத்தி பலாத்கார வழக்கு….. குற்றவாளிகள் மனுக்கள் தள்ளுபடி…..ஐகோர்ட் அதிரடி

  • by Authour

தர்மபுரி மாவட்டம் வாச்சாத்தி மலைகிராமத்தில் சந்தன மரங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறி, 1992 ஜூன் 20-ம் தேதி வனத்துறையினர், காவலர்கள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் அங்கிருந்த இளம் பெண்கள் 18 பேரை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த வழக்கை விசாரித்த சிபிஐ அதிகாரிகள், 4 ஐஎப்எஸ் அதிகாரிகள் உள்பட வனத்துறையினர், காவல்துறையினர், வருவாய் துறையினர் என்று 215 பேர் மீது பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணையின்போது, குற்றம் சாட்டப்பட்ட 50க்கும் மேற்பட்டவர்கள் இறந்துவிட்டனர்.

வழக்கை விசாரித்த தர்மபுரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் குற்றவாளிகள் என 2011ம் ஆண்டு தீர்ப்பளித்தது. பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட 4 ஐஎப்எஸ் அதிகாரிகள் உள்பட 17 வனத்துறையினரில் 12 பேருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், 5 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. மற்றவர்களுக்கு ஓராண்டு முதல் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து தண்டனை பெற்றவர்கள் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன், வாச்சாத்தி மலை கிராமத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த வழக்கின் மேல் முறையீட்டு மனு மீது நீதிபதி வேல்முருகன் இன்று (வெள்ளிக்கிழமை)  காலை அதிரடி தீர்ப்பளித்தார். 

தீர்ப்பின் விவரம் வருமாறு: குற்றம் சாட்டப்பட்டவர்களின் மேல் முறையீட்டு மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுகிறது. அதன்படி

4 ஐஎப்எஸ் அதிகாரிகள் உள்பட 17 வனத்துறையினரில் 12 பேருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், 5 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. மற்றவர்களுக்கு ஓராண்டு முதல் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அந்த தண்டனைகள் உறுதி செய்யப்படுகிறது.

அத்துடன் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 18 பெண்களுக்கும்  உடனடியாக தலா ரூ.10 லட்சம்  நிவாரணம் வழங்க வேண்டும். இதில் ரூ.5 லட்சத்தை  குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் வசூலிக்க வேண்டும்.  இந்த சம்பவம் நடந்தபோது  பணியில் இருந்த மாவட்ட எஸ்.பி. கலெக்டர்  மற்றும்  வனத்துறை அதிகாரி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  பாதிக்கப்பட்டவர்களின்  குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி அதிரடி தீர்ப்பு வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!