இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றார். இதை வரவேற்கும் விதமாக தஞ்சை மாவட்டம், பாபநாசத்தில் திமுக சார்பில் வெடி வெடித்து, பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப் பட்டது. இதில் மாவட்ட துணைச் செயலர் துரை முருகன், பாபநாசம் தெற்கு ஒன்றியச் செயலர் நாசர், பாபநாசம் பேரூர் செயலர் கபிலன், கார்த்திக், மாவட்டக் கவுன்சிலர் பாத்திமா ஜான், அனிபா, பேரூர் அவைத் தலைவர் துரை, துணைச் செயலர் சின்ன உதயா, முன்னாள் ஒன்றியக் கவுன்சிலர் அறிவழகன், செல்வ முத்துக் குமரன், இளைஞரணி நிர்வாகி மணி கண்டன் உட்பட பலர் பங்கேற்றனர்.