Skip to content
Home » உதயநிதிக்கு அமைச்சர் பதவி?……தலைமைச்செயலகத்தில் முழு வீச்சில் தயாராகும் தனி ரூம்…..

உதயநிதிக்கு அமைச்சர் பதவி?……தலைமைச்செயலகத்தில் முழு வீச்சில் தயாராகும் தனி ரூம்…..

தமிழக அமைச்சரவை வலுப்படுத்தும் விதமாக தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அமைச்சரவையை மாற்றி அமைக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் தலைமைச் செயலத்தில் உள்ள முதல் தளத்திலும் இரண்டாவது தளத்திலும் அமைச்சர்களுக்கு அறை ஒதுக்கப்பட்டு, இலாக்கா வாரியாக அமைச்சர்கள் அந்த அறையை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில்,  தலைமைச் செயலகத்தின் பத்தாவது எண் நுழைவாயிலில் உள்ள ரூம் ஒன்று பொதுப்பணித்துறை உத்தரவின் பேரில் பணியாளர்கள் அந்த ரூமை தயார் செய்து வருகின்றனர். அந்த அறை தமிழக அரசின் டில்லி பிரதிநிதி ஏ கே எஸ் விஜயனுக்கு ஒதுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

அதேபோல 2வது தளத்தில் சட்டத்துறை செயலாளர் கோபி குமார்  ரூமின் அருகே சிறப்பு திட்டம் செயலாக்கு துறை அலுவலகம் தற்போது உதயநிதிக்கு அமைச்சரவையில் இலாக ஒதுக்கப்பட்டால் அந்த அறை அமைச்சர் அறையாக பயன்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலினுக்கு விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *