Skip to content
Home » ஊத்தங்கரையில் 50 செ.மீ. மழை….. ஏரி உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது

ஊத்தங்கரையில் 50 செ.மீ. மழை….. ஏரி உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது

பெஞ்சல் புயல் நேற்று முன்தினம் இரவு புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. இதனால், விழுப்புரம், திருவண்ணாமலையை தொடர்ந்து, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று காலை முதலே விட்டுவிட்டு மழை பெய்து கொண்டிருந்தது. நேற்று பிற்பகலில் இருந்து இன்று காலை வரை இடைவிடாத மழை பெய்த நிலையில், ஊத்தங்கரை, போச்சம்பள்ளி சுற்றுவட்டாரங்களில் பெய்த மழையால் அப்பகுதியில் வசிக்கும் மக்களின் இயல்பு வாழக்கை முற்றிலும்   முடங்கியது.

அச்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், ஊத்தங்கரை அண்ணாநகர், காமராஜர் நகர் குடியிருப்பு பகுதிகளில் அதிகளவில் தண்ணீர் தேங்கியுள்ளதால், பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வர முடியாமல் அவதியுற்று வருகின்றனர். மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு, எஸ்பி தங்கதுரை ஆகியோர் இன்று காலை பார்வையிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர்.
போச்சம்பள்ளி சுற்றுவட்டாரங்களில் இன்று காலை 7 மணி நிலவரப்படி 25 செ.மீட்டர் (250 மில்லிமீட்டர்) மழை பெய்துள்ளது. போச்சம்பள்ளி அருகே உள்ள கோணணூர் ஏரி நிரம்பி வெளியேறிய உபரிநீர் வெளியேறி ஊருக்குள் வெள்ளப்பெருக்கெடுத்தால், அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால், தருமபுரி – திருப்பத்தூர் சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஏரியின் உபரிநீர் போச்சம்பள்ளி காவல் நிலையம், 4 சாலையில் உள்ள கடைகளுக்குள் புகுந்துள்ளது. மேலும், போச்சம்பள்ளியில் இருந்து தருமபுரி, திருப்பத்தூர், சிப்காட் செல்லும் 3 சாலைகளில் தற்காலிகமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இன்று(2-ம் தேதி )காலை 7 மணி நிலவரப்படி மழையளவு ஊத்தங்கரையில் அதிகப்பட்சம் 50.30 செ.மீட்டரும், போச்சம்பள்ளியில் 25 செ.மீ, பாம்பாறு அணை 20.50, பாரூரில் 20.20 செ.மீ, பெணுகொண்டாபுரம்18.90 செ.மீ, நெடுங்கல் 14.02 செ.மீ, கிருஷ்ணகிரி 10.80 செ.மீ, கிருஷ்ணகிரி அணை 9.80 செ.மீ, மழை பதிவாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *