திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உத்தமர்கோயில் மேம்பாலத்தில் மோட்டார் பைக் மீது பின்னால் வந்த கார் மோதிய விபத்தில் படுகாயம் அடைந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
துறையூர் நரசிங்கபுரம் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் கந்தசாமி் இவரது மனைவி 62 வயதான மின்னல் கொடி.இவர் நேற்று தனது பேரருடன் மோட்டார் பைக்கில் நம்பர் 1 டோல்கேட்டிலிருந்து மண்ணச்சநல்லூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது லால்குடி சிறுதையூர் அக்ரஹரம் பகுதியைச் சேர்ந்த 40 வயதான ரவிச்சந்திரன் காரில் பின்னால் வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் உத்தமர் கோயில் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மோட்டார் பைக் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தடுமாறி கீழே விழுந்த மின்னல்கொடி படுகாயம் அடைந்தார்.விபத்தைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து புகாரின் பேரில் கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.