துபாயில் இருந்து இன்று திருச்சி விமான நிலையத்திற்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் உடமைகளை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு ஆண் பயணியின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால் அவரை தனியாக அழைத்து சென்று சோதனை போட்டபோது அவர் உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த 10 ஆயிரம் அமெரிக்க டாலர்களை பறிமுதல் செய்தனர்.
இந்த டாலரின் இந்திய மதிப்பு ரூ. 8 லட்சத்து 5 ஆயிரத்து 50 ஆகும். அவரிடம் தொடர்ந்து சுங்க அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.