Skip to content

உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறுகிறது அமெரிக்கா

அமெரிக்க அதிபரா டொனால்ட் டிரம்ப் நேற்று பதவியேற்றார். பதவியேற்பு விழாவை தொடர்ந்து அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் கோப்புகளில் கையெழுத்திட்டார். அதன்படி முன்னாள் அதிபர் ஜோபைடன் ஆட்சி காலத்தில் செயல்படுத்தப்பட்ட 78 நடவடிக்கைகளை ரத்து செய்வது தான் டொனால்ட் டிரம்ப் முதல் கையெழுத்தாக அமைந்தது. அதில் ட்ரம்ப் எடுத்த முக்கிய முடிவுகளில்,

* அமெரிக்காவில் இனி ஆண் – பெண் ஆகிய இரு பாலினங்கள் மட்டுமே அங்கீகரிக்கப்படும்.

*ராணுவத்தில் மாற்று பாலினத்தவர்களுக்கு தடை. சிறார் பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு தடை விதிக்கப்படும்.

* 2021ல் கேபிடல் கட்டடம் சூறையாடல் சம்பவத்தில் தனது ஆதரவாளர்கள் 1,500 பேர் மீது போடப்பட்ட வழக்குகளில் இருந்து பொது மன்னிப்பு.

*பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகும் உத்தரவில் கையெழுத்து.
முதல் ஆட்சிக்காலத்திலும் இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகியிருந்தார்.

*அமெரிக்கா – மெக்சிகோ எல்லையில் அவசர நிலை பிரகடனம் செய்யப்படுகிறது. எல்லை பலப்படுத்தப்படும். சட்டவிரோதமாக நாட்டுக்குள் குடியேறியவர்களை கூண்டோடு வெளியேற்ற உத்தரவு

*உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறுகிறது. முதல் ஆட்சியின் இறுதியிலும் இதே உத்தரவில் கையெழுத்திட்டு இருந்தார்.

*மெக்சிகோ வளைகுடா இனி அமெரிக்கா வளைகுடா என அழைக்கப்படும்.

*பனாமா கால்வாயை தற்போது சீனா கட்டுப்படுத்துகிறது. கால்வாயின் நிர்வாக உரிமையை பனாமாவிடம்தான் அமெரிக்கா ஒப்படைத்தது. பனாமா கால்வாயை அமெரிக்கா திரும்பப் பெறும் என்றும் அதிபர் ட்ரம்ப் உறுதி அளித்தார்.