இஸ்ரேலுக்கும், ஹமாஸ் இயக்கத்துக்கும் தீவிர போர் நடந்து வரும் நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியதாவது:ஹமாசை கண்டிப்பாக இஸ்ரேல் அழிக்க வேண்டும். இந்த போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா துணையாக நிற்கும். ஆனால் காஸாவை இஸ்ரேல் ஆக்கிரமிக்ககூடாது. ஆக்கிரமிப்பது பெரிய தவறு.
இவ்வாறு அவர் பேசினார். இதுவரை இஸ்ரேலுக்கு மட்டும் ஆதரவு தெரிவித்து வந்த அமெரிக்கா, இப்போது சுதந்திர பாலஸ்தீனத்துக்கும் ஆதரவு தெரிவித்துள்ளது. பைடனின் இந்த பேச்சு உலக அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.