அமெரிக்க அதிபர் தேர்தல் நேற்று நடந்தது. இந்திய நேரப்படி இன்று அதிகாலையில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. உடனடியாக வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் 9 மாகாணங்களில் வெற்றி பெற்றுள்ளார். இண்டியானா, கென்டகி, டென்னஸி, மிசிசிபி, மேற்கு விர்ஜீனியா, அலபாமா, தெற்கு கரோலினா, புளோரிடா, ஒக்லஹாமா மாகாணங்களில் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் 96 எலக்டோரல் வாக்குகளை பெற்றுள்ளார். வெர்மோண்ட், மசாசூசெட்ஸ், கனெக்டிகட், மேரிலேண்ட் ஆகிய 4 மாகாணங்களில் ஜனநாய கட்சி வேட்பாளரும், தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவருமான கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் 35 எலக்டோரல் வாக்குகளை பெற்றுள்ளார். இந்திய நேரப்படி இன்று காலை 9 மணி அளவில் கிடைத்த நிலவரப்படி டிரம்ப் 198 எலக்ட்ரல் வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். கமலா 112 எலக்ட்ரல் வாக்குகளே பெற்று உள்ளார். எனவே ட்ரம்ப் வெற்றி பெறுவார் என்றே பரவலாக கூறப்படுகிறது.