சென்னையில் இன்று காலையில் 2 மணி நேரத்தில் 7 செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்தன. திருவான்மியூர், கிண்டி, சைதாப்பேட்டை, பெசன்ட் நகர், பள்ளிக்கரணை, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் செயின் பறிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. திருவான்மியூர் இந்திரா நகரில் வேலைக்கு சென்று கொண்டிருந்த பெண்ணிடம் 5 சவரன் நகையை மர்ம நபர்கள் பறித்துச் சென்றுள்ளனர். அதே பகுதியில் உள்ள சாஸ்திரி நகரிலும் செயின் பறிப்பு நடந்துள்ளது. ஒரே பைக்கில் வந்த 2 பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டனர்.
இதனால் இன்று காலை சென்னை நகரமே அலறியது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் மாநகர போலீசார் ஊஷாரானார்கள். அனைத்து இடங்களிலும் நடந்த சம்பவங்களை விசாரித்த போலீசார் அனைத்தும் ஒரே கும்பலின் கைவரிசை என தெரியவந்தது. அதனதை் தொடர்ந்து போலீசார் விமான நிலையம் சென்று ஐதராபாத் புறப்பட தயாராக இருந்த இன்டிகோ விமானத்தில் இருந்த 2 பேரை பிடித்து அவர்களிடம் இருந்து செயின்களை பறிமுதல் செய்தனர்.
அத்துடன் கைதான இருவரும் உ.பி.யை சேர்ந்தவர்கள் என்றும். இவர்கள் அடிப்படி சென்னை வந்து நகை பறிப்பில் ஈடுபட்டதும், இவர்களது கூட்டாளிகள் டில்லியில் இருப்பதும் தெரியவந்தது. டில்லியில் முகாமிட்டுள்ள கும்பல் தலைவனையும் பிடிக்க போலீசார் டில்லி செல்கிறார்கள்.
கைது செய்யப்பட்டுள்ள இருவரும் மீதும் 30க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன என தெரியவந்துள்ளது.