உத்தரப்பிரதேசம் மாநிலம் உன்னாவ் ரயில் நிலையம் அருகே ரயில் பாதையில் ஒரு இளைஞர் படுத்துக்கொண்டு தனது உயிரைப் பணயம் வைத்து ரீல்ஸ் எடுத்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. ரயில் தண்டவாளத்திற்கு நடுவே குப்புற படுத்து ரயில் கடந்து செல்வதை படம் பிடித்தது போல ரீல்ஸ் பதிவிட்ட ரஞ்சித் சௌரேஸியா என்பவரை போலீசார் கைது செய்தனர். பொதுமக்களின் பாதுகாப்பை அச்சுறுத்தும் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
உபி… தண்டவாளத்தில் படுத்துக்கொண்டு ரீல்ஸ்… வாலிபர் கைது..
- by Authour
