உத்தர பிரசேத மாநிலம் ராம்பூர் நகரசபை தேர்தல் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த நகரசபை தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் அங்கு வழக்கமாக தலைவர் பதவிக்கு போட்டியிடும் காங்கிரஸ் நிர்வாகி மமுன் ஷாகான் அதிர்ச்சி அடைந்தார். இதற்கு காரணம் 45 வயதாகியும் அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. இப்போது நகரசபை தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால் அந்த பதவியை விட்டு கொடுக்க விரும்பாத அவர் உடனடியாக திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். இதற்காக அறிவிப்பு வெளியான 45 மணி நேரத்தில் மமுன் ஷாகான் மணப்பெண் அறிவிப்பு வெளியிட்டு ஒருவரை கண்டுபிடித்தார். அந்த பெண்ணை உடனடியாக அவர் திருமணமும் செய்து கொண்டார். இது உத்தர பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.