உ.பி மாநிலத்தில் இந்தியா கூட்டணி இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்துள்ளது. மொத்தம் உள்ள 80 தொகுதி்களில் 17 தொகுதிகள் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ரேபரேலி, அமேதி, கான்பூர் உள்ளிட்ட தொகுதிகள் அதில் அடங்கும். சமாஜ்வாதி கட்சி மற்ற தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஏற்கனவே அந்த கட்சி 31 தொகுதிகளில் வேட்பாளர்களை அறிவித்து விட்டது. இந்த தகவலை சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.