நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம், கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியானது. இயக்குநர் நெல்சன் இயக்கி இருந்த இந்தத் திரைப்படத்தில் தமன்னா, சுனில், மோகன்லால், சிவராஜ்குமார் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இந்த திரைப்படம் பெரும்பான்மையான ரசிகர்களை கவர்ந்துள்ளது.
மோகன் லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப் ஆகியோர் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளனர். ரஜினியின் மனைவியாக ரம்யா கிருஷ்ணா நடித்துள்ளார். தமன்னா மற்றும் சுனில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ரஜினிகாந்தின் மகனாக வசந்த் ரவி நடித்து உள்ளார்.
உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருவதுடன் படம் வெளியான அனைத்து மொழிகளிலும் படம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. ஜெயிலர் படத்தின் ரிலீஸுக்கு முந்தைய நாளே ரஜினிகாந்த்,
இமயமலைக்கு ஆன்மிக பயணம் சென்றார். ரஜினிகாந்த் உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள தயானந்த் சரஸ்வதி மடம், வியாசர் குகை, சரஸ்வதி நதி மறையும் இடத்திற்கு சென்று புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலானது.
இந்நிலையில் உத்தரப்பிரேத துனண முதல்வர் கேசவ் பிரசாத்துடன், ரஜினிகாந்த் இன்று ஜெயிலர் படம் பார்த்து உள்ளார். அவருடன் லதா ரஜினிகாந்த்தும் சென்று உள்ளார். திரையரங்குகளில் இவர்கள் அமர்ந்து இருக்கும் புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகிறது. முன்னதாக உத்தரப்பிரேத முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் ரஜினிகாந்த் இன்று ஜெயிலர் படம் பார்க்க இருந்த நிலையில் அது நடக்காமல் போனது.