உ.பி. மாநில முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி முன்னாள் தலைவருமான முலாயம் சிங் யாதவ் மரணம் அடைந்ததால் மெயின்புரி மக்களவை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. அங்கும் இன்று ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. இதில் அகிலேஷ் யாதவ் மனைவி டிம்பிள் யாதவ் சமாஜ்வாதி சார்பில் போட்டியிட்டார். அவர் தற்போது முன்னணியில் உள்ளார். அதுபோல உ.பி. ராம்புர் சட்டப்பேரவை தொகுதியிலும் சமாஜ்வாதி வேட்பாளர் முகமது அசிம்ராஜா முன்னியலைில் உள்ளார்.