உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் மசூதியை தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வுசெய்ய சென்றபோது வன்முறை ஏற்பட்டது. இதில் 4 பேர் கொல்லப்பட்டனர்.வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதியில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் வன்முறை பாதித்த சம்பல் பகுதிக்கு சென்று மக்களை சந்திக்க ராகுல் திட்டமிட்டார். இதற்காக இன்று காலை டில்லியில் இருந்த புறப்பட்ட ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உ.பி. எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.டில்லி – மீரட் நெடுஞ்சாலையில் உள்ள காஸிப்பூர் எல்லையில் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா சென்ற காரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.ஆனாலும் ராகுல், பிரியங்கா காந்தி ஆகியோர் அங்கேயே இருக்கிறார்கள். ராகுலுக்கு ஆதரவாக அங்கு காங்கிரஸ் தொண்டர்கள் குவிந்து உள்ளனர். இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது. போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டு உள்ளனர்.