உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்த வைஷாலி சவுத்ரி என்ற இளம்பெண், அவ்வப்போது சமூக வலைதளங்களில் ‘ரீல்’ வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருவார். இந்நிலையில் சாஹிபாபாத் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் காரின் முன்பாக நின்றுகொண்டு ஆபாச செய்கையில் ரீல் வீடியோவை தயாரித்து வைஷாலி சவுத்ரி வெளியிட்டார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது மட்டுமின்றி, பலரது கண்டனங்களுக்கும் ஆளானது. அதையடுத்து காசியாபாத் போலீசார், அந்த ரீல் வீடியோவை வெளியிட் வைஷாலி சவுத்ரியை தேடி பிடித்து, போக்குவரத்து விதிமீறல் விதிகளின்படி ரூ.17 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் அவர் மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சமூக வலைதளத்தில் வைஷாலி சவுத்ரியை 6,53,000 பேர் பின்தொடர்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது