தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே ஒழுகச்சேரி கிராமத்தில் தமிழ் சேவா சங்கம் சார்பில் நடந்த விழாவில் தமிழ்நாடு கவர்னர் ரவி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:
கில்ஜி, துக்ளக், கால்டுவெல், ஜி.யு. போப் உள்ளிட்டோர் வந்து நம்முடைய தர்மத்தை சீரழிக்க நினைத்தாலும், யாராலும் வெற்றி பெற முடியவில்லை. பாரதிய தர்மம் நம்முடைய இதயத்தில் ஒன்றி இருப்பதே அதற்கு காரணம். ஆனால் பிரிட்டிஷ்காரர்கள் நம்முடைய ஆன்மிகம், மொழி, பண்பாட்டில் பாதிப்பை ஏற்படுத்திச் சென்றனர். அதனால்தான் அரசியலில் விடுதலை பெற்றிருந்தாலும், நம் கலாச்சாரம், பண்பாட்டை எப்போது மீட்டுருவாக்கம் செய்கிறோமோ அன்றுதான் உண்மையான விடுதலை என மகாத்மா காந்தி கூறினார்.
இந்து தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசுபவர்கள் உள்ளார்ந்த நோக்கம் இருக்கிறது. தீண்டாமை போன்றவை நமது சமூகத்தில் நிகழ்ந்து கொண்டுநிருகிறது. தீண்டாமை இந்தியாவிலேயே தமிழகத்தில் தான்
அதிகமாக உள்ளது. தாழ்த்தப்பட்டவர்களை கோவிலுக்கு செல்லக்கூடாது எனவும் வெளிவரும் செய்திகளை நான் இங்கு தான் கேள்விப்படுகிறேன். அண்டை மாநிலங்களில் நடப்பதில்லை. இந்தியாவில் வேறு எந்த மாநிலங்களிலும் சாதி குறித்த கை அணிகலன்களை அணிவதை நான் பார்த்ததில்லை.
இதன் மூலமாகவே சமூக அநீதியை உருவாக்குவதற்காக சாதிய அரசியல் கட்சிகள் முன்னெடுத்து வருகின்றனர். தாழ்த்தப்பட்ட மக்களின் வீட்டில் சமைத்த உணவை சாப்பிட மாட்டேன் என சொல்லும் செய்தியையும் இந்த மாநிலத்தில் தான் கேள்வி பட்டுள்ளேன். நாட்டில் தீண்டாமை ஏற்புடையதல்ல. அனைவரும் ஒரே நம்பிக்கை ஒரே குடும்பமாக வாழ வேண்டியது கட்டாயம்.
இவ்வாறு அவர் பேசினார்.