Skip to content
Home » கோவையில் 29ம் தேதி அமைப்புசாரா தொழிலாளர் மாநாடு….

கோவையில் 29ம் தேதி அமைப்புசாரா தொழிலாளர் மாநாடு….

கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் கோவை மண்டல மாநாடு வரும் 29 ஆம் தேதி கோவையில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் இது தொடர்பான ஆலோசணை கூட்டம் உக்கடம் பகுதியில் உள்ள தாஜ் டவர் அரங்கில் நடைபெற்றது..

இதில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தின் தலைவர் பொன் குமார் கலந்து கொண்டு, மாநாட்டை சிறப்பாக நடத்துவது குறித்து மாநாட்டு பொறுப்பாளர்களிடம் ஆலோசணை நடத்தினார்..

கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் கூட்டமைப்பின் கொங்கு மண்டல தலைவர் ஜி.எம்.முகம்மது ரபீக் தலைமையில் நடைபெற்ற இதில்,
மாநாடு ஏற்பாட்டு குழு நிர்வாகிகள் ஆறுமுகம்,கவிஞர் குரு நாகலிங்கம்,பாலகிருஷ்ணன், சந்திரமோகன் உட்பட கொங்கு மண்டலத்திற்கு உட்பட்ட திருப்பூர் நீலகிரி கோவை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த கூட்டமைப்பின் மாநில மண்டல மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..
இதில் பேசிய தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் பொன் குமார் ,கூட்டமைப்பில் உள்ள தொழிலாளர்கள் வாரியத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் , செயல்பாடுகள் மற்றும் புதிய கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் விதமாக இந்த மாநாடு நடைபெற உள்ளதாக தெரிவித்தார்..

மாநாட்டில் தொழிலாளர்களுக்கு பொங்கல் பரிசு அல்லது தொழிலாளர்கள் தினமான மே தின பரிசு வழங்க கோருவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைக்க இருப்பதாக குறிப்பிட்ட அவர்,
தி.மு.க.தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்று,கடந்த மூன்றரை ஆண்டுகளில் வாரியங்கள் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும்,
கடந்த 2021 ஆம் ஆண்டு வாரியத்தில் 13 இலட்சம் தொழிலாளர்கள் இருந்த நிலையில் தற்போது இருபது இலட்சமாக அதிகரித்துள்ளாக கூறினார்.. அதே போல மூன்றரை ஆண்டுகளில்
எல்லா வாரியங்களிலும் உள்ள இருபத்தைந்து இலட்சம் தொழிலாளர்களுக்கு சுமார் 2,150 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்