நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் கடந்த 10 தினங்களுக்கு முன் தொடங்கியது. ஆனால் ஒரு நாள் கூட கூட்டம் முழுமையாக நடைபெறவில்லை. தினமும் எதிர்க்கட்சிகள் அதானி பிரச்னை, மணிப்பூர் பிரச்னை குறித்து விவாதிக்க வேண்டும் என முழக்கமிடுவதால் சபையில் அமளி ஏற்பட்டு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நாளை (வியாழன்) மதியம் 1 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம் நடக்கிறது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் முக்கிய பிரச்னைகள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. குறிப்பாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் போராட்டம், ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா உள்ளிட்டவை குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் என தெரிகிறது.