விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கான மத்திய அரசின் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த பேட்மிண்டன் வீராங்கனைகள் துளசிமதி முருகேசன், நித்யஸ்ரீக்கு, மனிஷா ராமதாஸ் ஆகியோருக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் பாரா ஒலிம்பிக்கில் சாதனை படைத்தவர்கள். டில்லியில் 17-ம் தேதி நடைபெறும் விழாவில் வீரர், வீராங்கனைகளுக்கு குடியரசுத் தலைவர் விருதுகளை வழங்குகிறார்