மத்திய பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு, தொழிலாளர்களுக்கு எந்த சலுகையும் அறிவிக்கவில்லை என அனைத்துதொழிற்சங்கங்களும் கண்டனம் தெரிவித்தன. மத்திய அரசின் இந்த பட்ஜெட்டுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், புதுக்கோட்டை தலைமை தபால் நிலையம் முன் தொ.மு.ச.,சி.ஐ.டி.யூ,
ஏஐடியுசி,ஏஐசிசிடியூ, ஆகிய தொழிற்சங்கத்தினர் மத்திய அரசின்
பட்ஜெட்நகலை கிழித்து இன்று போராட்டம் நடத்தினர்.
போராட்ட த்திற்கு மாவட்ட தொ.மு.ச.தலைவர் அ.ரெத்தினம் தலைமை வகித்தார்.போராட்டத்தில் சிஐடியூ மாநிலசெயலாளர் ஏ.ஶ்ரீதர், தொ.மு.ச.பேரவைசெயலாளர் எம்.வேலுச்சாமி,ஏஐடியூசி மாவட்ட செயலாளர் ப.ஜீவானந்தம் ,ஏஐசிசிடியூ மாவட்ட செயலாளர் வி.முத்துராஜா, சிஐடியூ மாநில செயலாளர் எஸ்.தேவமணி, சிவில் சப்ளை தொ.மு.ச.மூர்த்தி, சிஐடியூ மாவட்ட தலைவர் முகமது அலி ஜின்னா உள்ளிட்ட பலர் கண்டன உரை ஆற்றினார் கள்.
தொழிலாளர் விரோத சட்டத் தொகுப்பு களை திரும்ப பெறவேண்டும், மக்கள் விரோத, தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோதபட்ஜெட்டைக்கண்டித்து இந்த பட்ஜெட் நகல் கிழிப்புபோராட்டம் நடத்தினர்.