Skip to content
Home » பீகார், ஆந்திராவுக்கு சிறப்பு திட்டங்கள்…. மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு..

பீகார், ஆந்திராவுக்கு சிறப்பு திட்டங்கள்…. மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு..

  • by Authour

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. நேற்று  பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது இந்த நிலையில் இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்ற கூட்டம் தொடங்கியது. அப்போது  நிதி அமைச்சர்  நிர்மலா சீதாராமன்  2024-25ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். முன்னதாக அவர்  ஜனாதிபதி மாளிகை சென்று ஜனாதிபதி முர்முவை சந்தித்து பட்ஜெட்  தாக்கல் குறித்து எடுத்து கூறினார்.  அப்போது ஜனாதிபதி,   அமைச்சர் நிர்மலாவுக்கு  இனிப்பு ஊட்டி வரவேற்று வாழ்த்தினார்.

அதைத்தொடர்ந்து மத்திய அமைச்சரவை கூட்டத்தி்லும் பட்ஜெட் விவரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து  பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

பட்ஜெட்டில் உள்ள முக்கிய அம்சங்கள் விவரம் வருமாறு:

பிரதமரின் இலவச உணவு வழங்கும்  கரீம் கல்யாண் திட்டம் மேலும் 5 ஆண்டுகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ஏழைகள், பெண்கள், விவசாயிகள் , இளைஞர்கள் ஆகிய 4 பிரிவினர் மீது தொடர்ந்து  கவனம் செலுத்த வேண்டி உள்ளது.

4 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு  திறன் பயிற்சி அளிக்கப்படும்.  இயற்கை வேளாண்மை செய்ய 1 கோடி விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும்.  கல்வி தொழிற்திறன் மேம்பாட்டுக்கு  நிதி ஒதுக்கப்படும்.

கடுகு, நிலக்கடலை   எள், சூரியகாந்தி  உற்பத்தி  அதிகரிக்க தி்ட்டம்.  விவசாய துறையில் டிஜிட்டல் மயம் புகுத்தப்படும்.  இளைஞர்கள் நலனுக்காக 5 திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.  வேளாண் துறைக்கு 1.52 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.  நாட்டில் வேலை வாய்ப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

உற்பத்தி துறையில் புதிதாக பணிகளில் சேரும் இளைஞர்களுக்கு அரசு 1 மாத ஊதியம் வழங்கும். இதன் மூலம் 30 லட்சம் இளைஞர்கள் பயனடைவார்கள்.  உற்பத்தி துறையில் 15 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.  உயர்கல்வி பயில மாணவர்களுக்கு ரூ.15 லட்சம் வரை கல்விக்கடன் வழங்கப்படும்.

உள்நாட்டில் கல்வி பயில ரூ.10 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படும். 20 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும்.  பெண்களுக்கான  ஹாஸ்டல் வசதி நாடு முழுவதும் ஏற்படுத்தப்படும்.  இதன் மூலம் பெண்கள் அதிக அளவில் பணிக்கு செல்ல முடியும்.

ஆந்திரா மறு சீரமைப்புக்கும், ஆந்திரா தலைநகர் அமைப்புக்கும் சிறப்பு நிதி அளிக்கப்படும்.   இதற்காக குடிநீர்,  ரயில்வே, சாலை போக்குவரத்து திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படும்.பீகார், ஆந்திராவுக்கு சிறப்பு நிதி அளிக்கப்படும்.  பீகாரில்  நெடுஞ்சாலை அமைக்க ரூ.26 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும். பீகாரில் புதிய விமான நிலையம், மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்படும்.  வெளிநாடுகளிடம் இருந்து கடன் பெற உதவி செய்யப்படும்.  ஆந்திரா 2 ஆக பிரிக்கப்பட்டபோது வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும். தலைநகர் அமராவதியை மேம்படுத்த ரூ.15 ஆயிரம் கோடி வழங்கப்படும்.

தொடர்ந்து அமைச்சர் பட்ஜெட் உரை படித்து வருகிறார்.

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *