Skip to content

கோடையில் தடையில்லாமல் மின்சாரம் வழங்க நடவடிக்கை- அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

  • by Authour

கோடை காலத்தில் தமிழ்நாடு முழுவதும் தடையில்லா சீரான மின் விநியோகம் வழங்குவது குறித்து சென்னையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமையகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு மின் பகிர்மானக் கழக அனைத்து மண்டல தலைமை பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வைப் பொறியாளர்கள் பங்கேற்றனர்.

அதைத்தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி  நிருபர்களிடம் கூறியதாவது:

கடந்த ஆண்டு  கோடை காலத்தில்  20ஆயிரத்து 830  மெகா வாட் அளவிற்கு உச்சபட்ச மின் தேவை ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு 22 ஆயிரம் மெகா வாட் அளவிற்கு மின் தேவை இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. அதற்கு மின்சார வாரியம் தயாராகவும் உள்ளது. வருகிற கோடைக்காலத்தில் தடையில்லாமல் சீராக மின் விநியோகம் செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கு  ஏற்கனவே விடப்பட்ட டெண்டரில்  எதிர்பார்த்த குறைந்த விலையில்  கிடைக்காததால்  அது ரத்து செய்யப்பட்டது. விரைவில் புதிய டெண்டர் கோருவதற்கு மின்சார வாரியம் தயாராக உள்ளது. விரைவில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும். மாதாந்திர  மின் கட்டண முறையை விரைவாக செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என முதல்-அமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஸ்மார்ட் மீட்டர் பொருத்திய பிறகு மாதந்தோறும் மின்கட்டணம் கணக்கீடு உறுதியாக நடைமுறைக்கு வரும்.

மின்வாரியத்தில்  மிக முக்கியமான பதவிகளுக்கான  காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.

இவ்வாறு அவர்  கூறினார்.