திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள உப்பிலியபுரம் பகுதியில் உலக பழங்குடியினர் தினத்தை முன்னிட்டு தனியார் திருமண மண்டபத்தில் மலைவாழ் பழங்குடியினர் மாநில மாநாடு நடைபெற்றது. நிகழ்ச்சியில் மலைவாழ் மக்கள் விவசாயிகள் முன்னேற்ற சங்கம் நிறுவனத் தலைவர் ராமசாமி கலந்துகொண்டார். பச்சைமலை, கொல்லிமலை, ஏலகிரி மலை,
போதமலை, காளிமலை, கல்வராயன் மலை, சின்ன கல்வராயன் மலை, ஏற்காடு மலை, பெரிய கல்வராயன் மலை, சித்தேரி மலை, ஜவ்வாது மலை ஜருகுமலை, பாலமலை, போன்ற 17 மலைகளில் வாழும் மலைவாழ் மக்கள் கலந்து கொண்டனர் . துறையூர் தாலுக்காவில் உள்ள பச்சை மலையானது பெரம்பலூர், சேலம், திருச்சி ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கியதாக இருந்து வருவகிறது இதனால் மலைவாழ் மக்களுக்கு மிகுந்த சிரமங்கள் ஏற்படுவதால் அதனை திருச்சி மாவட்டத்துடன் ஒன்றிணைத்து தனி வட்டாட்சியர் அலுவலகம் செயல்படுத்த வேண்டும், வனத்துறையில் உள்ள காலி பணியிடங்களை மலைவாழ் மக்களுக்கு ஒதுக்க வேண்டும், என்று பல்வேறு தீர்மானங்கள் இயற்றப்பட்டது. இதில் நூற்றுக்கு மேற்பட்ட பழங்குடியின மக்கள் கலந்து கொண்டனர்