பெண்ணாடம் லயன்ஸ் சங்கமும், உலக திருக்குறள் கூட்டமைப்பும் இணைந்து நடத்தும் உலக மகளிர் தின நிகழ்ச்சிக்கு பெண்ணாடம் லயன்ஸ் சங்க தலைவர் லயன். கு.மேழிச்செல்வன் தலைமை தாங்கினார்.
லயன்ஸ் சங்க பொருளாளர் லயன். வெ. சக்திவேல் வரவேற்புரை ஆற்றினார்.
சிறப்பு விருந்தினர்கள் பன்னாட்டு லயன்ஸ் சங்க முன்னாள் கூட்டுமாவட்டத் தலைவர் PMJF. லயன். V. இரத்தினசபாபதி,உலகத் திருக்குறள் கூட்டமைப்பு தலைவர் லயன். மு. ஞானமூர்த்தி,உலகத் திருக்குறள் கூட்டமைப்பு துணைத் தலைவரும், லயன்ஸ் மாவட்டத் தலைவருமான லயன். சீனு. பழமலை, உலகத் திருக்குறள் கூட்டமைப்பு மாவட்டத் தலைவர் லயன். து. அருள்முருகன் அவர்கள். மாவட்டத் தலைவர் மகளிர் தினவிழா லயன்.ப. பத்மாவதி,மண்டலத் தலைவர் லயன். ஆர். வித்யாஶ்ரீ, நெய்வேலி காஸ்மோ பாலிடன் லயன்ஸ் சங்கத் தலைவர் லயன். பேஃபியோலா ஆண்டனி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
பாராட்டு பெற்ற சாதனையாளர்கள் …
உதவிச் செயற்ப் பொறியாளர் மின்சார வாரியம் வி. விஜயலெச்சுமி, கிராம நிர்வாக அலுவலர் எம். அனிதா, யோகா பேராசிரியர் திருமதி. வசந்தா இளங்கோவன், உலகத் திருக்குறள் கூட்டமைப்பு மகளிர் அமைப்பு மாவட்டத்தலைவர் பாவலர்.நிறைமதி நீலமேகம், வழக்கறிஞர் திருமதி அனிதா அருள்முருகன், காவல்துறை உதவி ஆய்வாளர் தேர்வு ஜி. மகாலெஷ்மி ஆகியோர் வாழ்த்துபெற்றனர்.
லயன். வி. விஜயகுமாரி, லயன். ஜெ. பிரியா ஆகியோர் நிகழ்சியை தொகுத்து வழங்கினார்கள். அரியலூர்
மாவட்டம், செந்துறை அறிஞர் அண்ணா மேல்நிலைப் பள்ளியைச் சார்ந்த மாணவர்கள், உலகப் பொதுமறை நூலாம் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் கலந்துகொண்டு சென்ற ஆண்டு தமிழக அரசின் பரிசுத்தொகையான ரூ. 15,000 பெற்ற இ.இளமுகில் நான்காம் வகுப்பு மற்றும் இந்த ஆண்டு போட்டியில் கலந்துகொள்ள தயாராகிவரும் மாணவர்கள் ப. நித்யஸ்ரீ ஏழாம் வகுப்பு, கு. தமிழ்நிலா, ர. ரக்க்ஷிதா, ர. ராஜேஸ்வரி, எ. அனிஷா எட்டாம்வகுப்பு மற்றும் தலைமை ஆசிரியர் தி. அமுதா ஆகியோர் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்கள்.
Lion. இராமலிங்கம், Lion. M. சிவப்பிரகாசம், Lion. கிருஷ்ணமூர்த்தி, Lion. வேங்கடேஸ்வரன், Lion. சபரி, Lion. பாண்டியன், Lion. விக்னேஷ் ,Lion. அழகுவேலன், Lion. டாக்டர் ஜெயபிரகாஷ் Lion. C. மாரிமுத்து, Lion. முத்துநாராயணன், உலகத் திருக்குறள் கூட்டமைப்பு மாவட்ட பொருளாளர் த. மயில்வாகனன், மாவட்டக் கரண
ஆசான் பாபு, வட்டாரச் செயலாளர் நீலமேகம், வட்டாரப் பொருளாளர் த. கிருஷ்ணமூர்த்தி. ரேவதி ஜெயராமன், விமலா ஜெயராமன், புரவலர் புவனா ஹரிபாபு,சூர்யா இரவி. செந்துரை அறிஞர் அண்ணா மேல்நிலைப்பள்ளி பொருளாளர் சுப்பிரமணியன், பள்ளி முதல்வர் அருள், கிராமநிருவாக அலுவலர் மணிகண்டன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
லயன். வி. விஜயகுமாரி, லயன். ஜெ. பிரியா , லயன். அ. சித்ராஆகியோர் நிகழ்சியை தொகுத்து வழங்கினார்கள். நிகழ்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் திருக்குறள் பதித்த பேனா உலகத்திருக்குறள் கூட்டமைப்பு சார்பில் வழங்கப்பட்டது. இருதியில் மகளிர் திறனாய்வுப் போட்டிகள் நடத்தி பரிசு வழங்கப்பட்டது. நிறைவாக உலகத் திருக்குறள் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர். லயன். த. செல்வராசு நன்றி உரையாற்றினார். மதியம் அனைவருக்கும் அருசுவை உணவு வழங்கப்பட்டது.