உலக இதய தினத்தை முன்னிட்டு 21ம் நூற்றாண்டின் சவாலாக விளங்கும் மாரடைப்பு நோய் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்திய மருத்துவர் சங்கம் மற்றும் தனியார் இருதய மருத்துவமனை மருத்துவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது கோவை மாவட்டம் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் ஆர்ச் பகுதியில் தொடங்கிய பேரணி கோவை சாலை, பல்லடம் சாலை ,புதிய திட்ட சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக மகாலிங்கபுரம் ரவுண்டானாவில் நிறைவடைந்தது மாரடைப்பு நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியவாறு 200க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர் இருதய நோய் குறிப்பாக மாரடைப்பு நோய் உலகளவில் அதுவும் இந்தியாவில் மிக அதிகமாகிக் கொண்டிருக்கிறது மாரடைப்பு நோய் தான் மனித
இனத்தை அழிக்கும் முதல் நோயாக கருதப்படுகிறது 40 சதவீத மனித உயிர்கள் இழப்பிற்கு காரணம் மாரடைப்பு நோய் 2025 ஆம் ஆண்டின் முடிவில் 25 சதவீத இந்திய மக்களை மாரடைப்பு நோய் பாதிக்கும் என்று கணக்கிடப்படுகிறது இதை தடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் இந்தியாவில் 10 வினாடிகளுக்கு ஒருவர் மாரடைப்பால் உயிரிழப்பது வேதனையானது கிரிக்கெட் செஸ் விளையாட்டுகளில் இந்தியா முதல் இடத்தில் இருப்பது பெருமை ஆனால் மாரடைப்பில் முதலிடம் என்பது கவலை அளிக்கிறது எனவே இளைஞர்கள் தீய பழக்கவழக்கங்களுக்கு அடிமையாகாமல் உடற்பயிற்சி, யோகா உணவு பழக்க வழக்கங்களை மாற்றி இந்த நோயிலிருந்து தங்களை காத்துக் கொள்ள முயற்சி எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.