Skip to content
Home » மோடி தகவலுடன் ரஷ்யா சென்ற அஜித்தோவல்..

மோடி தகவலுடன் ரஷ்யா சென்ற அஜித்தோவல்..

  • by Senthil

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்துள்ள போர், இரண்டு ஆண்டுகளைக் கடந்துள்ளது. ஏராளமான மக்கள் கொல்லப்பட்டனர். இருதரப்பும் பேச்சு வாயிலாக தீர்வு காண வேண்டும் என, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்தபோது, பிரதமர் மோடி வலியுறுத்தினார். அமைதி பேச்சுக்கு தேவையான உதவியை செய்யத் தயாராக இருப்பதாகவும் பிரதமர் உறுதியளித்திருந்தார்.அமைதிப் பேச்சுக்கு இந்தியா மத்தியஸ்தம் செய்தால், அதற்கு தயாராக இருப்பதாக புடின் கூறியிருந்தார். இந்த நிலையில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ரஷ்யா சென்றுள்ளார். அமைதி பேச்சு தொடர்பாக, ரஷ்யாவுடன் அவர் பேசுவார் என்று தெரிகிறது.  இந்த நிலையில் போர் நிறுத்த திட்டத்தோடு, அஜித் தோவல் ரஷ்யா சென்றிருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ஜெர்மன் வெளியுறவுத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், ரஷ்யா – உக்ரைன் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர இருநாடுகளும் முன்வருவார்கள் என்று இந்தியா நம்புகிறது. இதன் ஒரு பகுதியாகவே, பிரதமர் மோடி முன்மொழிந்த அமைதிப் பேச்சுவார்த்தைக்கான திட்டத்துடன், தேசிய பாதுகாப்பு செயலாளர் அஜித் தோவல், ரஷ்யாவுக்கு சென்றுள்ளார். உலகளவில் இந்தியாவின் செயல்பாடுகள் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. நிச்சயம், இருநாடுகளிடையே அமைதியான சூழல் நிலவ இந்தியா முயற்சிக்கும், எனக் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!