விகடன் பதிப்பகம் சார்பில்” எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் ” என்ற பெயரில் புரட்சியாளர் அம்பேத்கர் குறித்த நூல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய ஆதவ் அர்ஜூனா, தமிழ்நாட்டில் மன்னர் ஆட்சி நடப்பதாக கூறினார். இந்நிலையில் கோவையில் நிருபர்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “உதயநிதி ஸ்டாலின் தேர்தலில் நின்று ஜெயித்தவர். அவரை எப்படி பிறப்பால் பொறுப்புக்கு வந்தவர் என சொல்ல முடியும். தேர்தலில் மக்களை சந்தித்து வருபவர்களை பிறப்பால் வந்தவர்கள் என சொல்ல முடியாது. எல்லா கட்சியும் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று சொல்வது வழக்கமானது. இதை ஆணவம் என்று சொல்வது சரியாக இருக்காது. திமுகவிற்கு ஆதரவாக பேசுகின்றேன் என நினைக்க வேண்டாம். திமுகவை வீழ்த்தக்கூடிய ஒரே அணி என்டிஏ கூட்டணி தான், திமுக கூட்டணியை வீழ்த்த நினைப்பவர்கள் என்டிஏ கூட்டணிக்கு வரலாம்” எனக் கூறினார்.